வாகன ஓட்டிகளே உஷார்... தமிழகத்தில் 1,82,375 பேரின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து!

 
டிரைவிங் லைசன்ஸ்


இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில்  போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது கட்டாயம். அதன் பிறகு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

டிரைவிங் லைசன்ஸ்

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மது குடிக்காமல் வாகனம் ஓட்டுவது மற்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது, இருசக்கர வாகனத்தில் இரு நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு சாலை விதிமுறைகள் அமலில் இருக்கிறது.  இந்த சாலை விதிமுறைகளை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கவில்லை.  இந்நிலையில் தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக தற்போது 1,82,375 பேரின் ஓட்டுனர் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

டிரைவிங் லைசன்ஸ்

இது குறித்து  டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜூலை முதல் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 76,15,713 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக  39,924 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து மேலும் 1.82 லட்சம் பேரின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாகன ஓட்டிகள் பீதியில் உறைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web