இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!!

 
ட்ரோன்

இன்று செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக மாதம் ரூ1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தேசியபாதுகாப்பு படை ஒத்திகை

அத்துடன் 127 பேருக்கு அண்ணா பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன. சென்னையில்  இன்று  முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சியும் நடைபெற உள்ளது.

ட்ரோன்

இதனால் 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் அனைத்தும்  சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.  இதன் அடிப்படையில்  சென்னையில் இன்று  முதல் செப்டம்பர்  17ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி காஞ்சிபுரத்திலும் ட்ரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web