இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை... எல்லைப்பகுதிகளில் கண்காணிப்புக்கள் தீவிரம்!!

தமிழக முதல்வர் இன்று வேலூரில் நடைபெற உள்ள தி.மு.க பவள விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரமாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகள் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. வெளிவாகனங்களுக்கு அனுமதி கிடையாது. எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு வேலூர் பகுதியில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் பெரிய பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று காலை 8 முதல் மாலை விழா முடியும் வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!