ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 
ரபேல்

ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்து வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் ரஃபேலில் பறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக அவர் மாறியுள்ளார்.

ரபேல்

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த ரஃபேல் விமானம் 2020ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. தற்போது 36 ரஃபேல்கள் சேவையில் உள்ள நிலையில், மேலும் 114 ரஃபேல் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முன்மொழிந்துள்ளது. அதேசமயம், கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுக்காக 26 ரஃபேல் விமானங்களை ரூ.64,000 கோடிக்கு இந்தியா–பிரான்ஸ் நாடுகள் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரௌபதி முர்மு சுகோய்–30 போர் விமானத்தில் பறந்திருந்தார். இதற்கு முன்னர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் (2006) மற்றும் பிரதீபா பாட்டில் (2009) ஆகியோரும் சுகோய்–30 விமானத்தில் பறந்துள்ளனர். ரஃபேல் விமானங்கள் அண்மையில் நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையிலும் முக்கிய பங்காற்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!