போதைப் பொருள் கும்பல் துப்பாக்கிச் சூடு ... 64 பேர் பலி, 81 பேர் கைது!
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை ஒடுக்க போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கை இரத்தச் சாயமாக மாறியது. கும்பல் உறுப்பினர்களுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட குறைந்தது 64 பேர் பலியாகினர். மேலும், 81 பேர் கைது செய்யப்பட்டதுடன், 42 துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் ரியோவின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதன்போது கும்பல் உறுப்பினர்கள் துப்பாக்கியால் போலீசாரை தாக்கினர். இதற்கு போலீசாரும் தக்க பதிலடி கொடுத்தனர். பல மணிநேரம் நீண்ட துப்பாக்கிச் சண்டையில் பலர் உயிரிழந்தனர். மேலும், தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல் பழிவாங்கும் நோக்கில் போலீசார் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது. பென்ஹா பகுதியில் போலீஸ் நிலையம் மீது எரிபொருள் வீசும் ட்ரோன் தாக்குதலின் காட்சி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு மேலாக திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கையின் நோக்கம், போதைப் பொருள் கடத்தல் கும்பலை முற்றிலும் அழிப்பதே என அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு ரியோ டி ஜெனிரோ நகரம் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
