பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு!! ஆய்வு செய்ய சுற்றறிக்கை!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா, புகையிலை உட்பட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து போதைப்பொருள் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கல்வி நிலையங்களில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க தீவிர முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களிடையே போதைப்பொரு பயன்பாடு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “கூல் லிப்” எனப்படும் போதைப்பொருளை மாணவர்கள் பயன்படுத்துகிறீர்களா என்பதை கண்காணிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மிக அருகாமையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் திடீரென மாணவர்களுக்கு மருத்துவ சோதனை செய்து மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கம் உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் வாரத்தின் முதல் நாள் காவல்துறை ஆய்வாளர், உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!