போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் - அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!

 
கீதா ஜீவன்

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். போதைப் பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று மாணவர்கள் மனதிலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறினார். 

தூத்துக்குடி மாவட்டம் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் இன்று (18.09.2025) இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ப்ராஜெக்ட் / பியூச்சர் இந்தியா டிரஸ்ட் இணைந்து நடத்திய நாஷா முக்த் பாரத் அபியான் ‘போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போதையில்லா தூத்துக்குடி மாவட்டம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்திவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
 
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : தமிழ்நாடு அரசின், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து போதைப் பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி இன்றையதினம் நடைபெறுகிறது. 

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

இந்த காலகட்டத்தில் இளைஞர் சமுதாயம் எதை நோக்கி செல்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் இளமை பருவத்தில் பாதை மாறிவிடக் கூடாது. மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த வயதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளை கவனிக்கும் பட்சத்தில் உங்கள் பாதை மிக அழகாக இருக்கும். சமூக விரோதிகள் இளைஞர் சமூகத்தை, போதைப் பொருள் விற்றல், போதைப் பொருளுக்கு அடிமையாக வைத்தல் உள்ளிட்ட செயல்களுக்குட்படுத்துகின்றனர். அவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் பொழுது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கப்படுகிறது. 

எனவே, போதைப் பொருள் பயன்படுத்தக்கூடாது எனவும், அதன் தீமைகள் குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். எதிர்கால தலைவர்களாக மாணவர்களாகிய நீங்கள் தான் தமிழ்நாட்டை வழிநடத்த போகிறீர்கள். மாணவர்களாகிய நீங்கள் தான் எதிர்கால தலைவர்கள் மற்றும் எதிர்கால தமிழ் சமுதாயம். யாருடைய கட்டாயத்தின் பேரிலும், நீங்கள் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு உள்ளாக கூடாது. 

அவ்வாறு இருக்கின்ற பொழுது, புத்திசாலியான முறையில் நல்ல முடிவுகளை எடுத்தல், நல்ல எதிர்காலம் அமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறலாம். போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். போதைப் பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று மாணவர்களாகிய உங்கள் மனதிலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளும் அதை மீறக்கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

பெற்றோர்களே உஷார் ... ஸ்ட்ராபெர்ரி சாக்லேட் வடிவில் புதிய போதை பொருள்... மாணவர்கள் தான் டார்கெட்டே! 

மேலும், யாரேனும் போதைப் பொருள் விற்றாலும் மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டணமில்லா உதவி எண் மூலம் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம். உங்கள் தகவல்கள் இரகசியமாக வைக்கப்படும். போதை பொருள் பயன்பாட்டை ஒழிப்பதற்காக தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களாகிய உங்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே போதைப்பொருள் பயன்பாட்டை ஒழித்திட முடியும். 

எனவே, போதைப் பொருள் பயன்பாட்டினால் ஆற்றலையும் அறிவையும் வீணாக்காமல், மிக கவனமாக அறிவை பயன்படுத்தி செயல்பட வேண்டும். படிக்கின்ற நேரத்தில் சிறந்த முறையில் படிக்க வேண்டும். நல்ல முறையில் உங்கள் எதிர்காலம் அமைய வேண்டும். சமுதாயத்தில் தொழிலதிபர்களாக, சான்றோர்களாக, ஆன்றோர்களாக உருவாக வேண்டும். குறிப்பாக சிறந்த மாணவர்களாக நீங்கள் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்கள். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?