மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. ரயிலில் ரூ.90 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தல்!

 
பிள்ளமன் பிரகாஷ்

நாட்டையே உலுக்கி வரும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய வருவாய் பிரிவு உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற பிள்ளமன் பிரகாஷ் என்பவரை கண்காணித்து வந்தனர்.

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பைகளுடன் சென்னையை சேர்ந்த பிள்ளமான்  ஏறினார். அதிகாரிகளும் ரயிலில் பின்தொடர்ந்தனர். இதையடுத்து, மதுரை ரயில் நிலையத்தில் பிள்ளமன் பிரகாஷ் இறங்க முயன்றபோது, ​​அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து, அவரது 2 பைகளையும் சோதனையிட்டனர். 10 பொட்டலங்களில் 15 கிலோ போதைப்பொருள், 15 கிலோ திரவப் பொருள் மற்றும் 30 கிலோ மெத்தாம்பெட்டமைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அவரை மதுரை ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.90 கோடி என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவரது வீட்டில் போதைப் பொருள் இருப்பதாக சில வாரங்களுக்கு முன் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தமிமுன் அன்சாரி வீட்டில் இருந்து சுமார் 10 கிலோ மதிப்பிலான யூரியா, அசிட்டோன், சோடியம் ஹைட்ராக்சைடு, மெத்தாம்பெட்டமைன் அடங்கிய பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையைச் சேர்ந்த தமிமுன் அன்சாரியின் நெருங்கிய நண்பர்கள் தான் அன்பும் அருணும். சமீபத்தில் மதுரை வந்த அன்பு, 'கெமிக்கல்' என கூறி போதை மருந்தை விட்டு சென்றதால் விசாரணை தீவிரமடைந்தது.

அன்பு, அருண் இருவரும் நைஜீரியர்களிடம் போதைப் பொருள்களுக்கான மூலப்பொருட்களை வாங்கி தமிமுன் அன்சாரியின் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். விசாரணையில் மதுரைக்கு வந்து தேவையான அளவு தயார் செய்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் புதிய திருப்பமாக புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய நைஜீரியர்களிடமும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்தான் மத்திய வருவாய் கோட்ட அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்று 90 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்து பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் ஒரே இடத்தில் வைக்காமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனித்தனியாக பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள்கள் எளிதாகக் கடத்தப்படலாம் என்பதால், சர்வதேச போதைப் பொருள் கும்பல்கள் தமிழகத்தை குடோனாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன என்பது விசாரணையில் புலப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web