அதிர்ச்சி வீடியோ... ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட டிடிஇ!

 
பாவ்னா

இந்தியா முழுவதும் தொலைதூர பயணங்களுக்கு நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே தேர்வு செய்கின்றனர்.  வசதியாக பயணம் செய்ய வேண்டுமெனில் தங்களுக்கான இருக்கைகளை முன்கூட்டியே   முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.  அதே  நேரத்தில் திடீர் பயணங்களுக்கு   ஓபன் டிக்கெட் எடுத்துக் கொண்டு  அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் பயணம் மேற்கொள்ளலாம் .  அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் கூட்ட நெரிசலுடன் வேறு சில  அசௌரியங்களும் இருக்கிறது.  சில பயணிகள் ஓபன் டிக்கெட்டிலேயே  கன்பார்ம் கோச்சில் பயணம் செய்பவர்களும் உண்டு.  


 

டிடிஆர்  அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன்  அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் பயணம் மேற்கொள்ள வலியுறுத்துவர். ஆனால் இங்கு  மாறாக பயணிகளை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டுள்ளார் ஒரு டிடிஆர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.   ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் ஜெனரல் டிக்கெட்டில்   ஏசி கோச்சில் ஏறிய ஒரு பெண்ணை டிடிஇ வெளியே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஹரியானா மாநிலத்தில், ஃபரிதாபாத்தில் இருந்து இருந்து புறப்பட்ட  ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலில்  ஏசி கோச் ஒன்றில் பாவ்னா என்ற 40 வயது   பெண் ஒருவர், தனது உடமைகளுடன் ஏறி பயணம் செய்தார் . இவர் ஃப்ரிதாபாத்தில் உள்ள எஸ்ஜிஜேஎம் நகரில் வசிப்பவர்.  இவர்  ஜான்சியில் நடந்த ஒரு திருமணவிழாவிற்காக சென்றதாகக் கூறப்படுகிறது.
 முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் ஜெனரல் டிக்கெட் எடுத்துள்ளார்.   ரயில் புறப்பட இருந்ததால், அவசர அவசரமாக ஏசி கோச்சில் ஏறிவிட்டார். அடுத்த ரயில் நிலையத்தில் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் மாறிக் கொள்ளலாம் என  இருந்தார்.  

பாவ்னா

டிக்கெட் பரிசோதகர், பாவ்னாவிடம், உடனடியாக ரயிலை விட்டு கீழே இறங்கி அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் பயணிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.   பாவ்னாவும், அடுத்த ஸ்டேஷனில் இறங்கிச் செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.  தேவைப்பட்டால் இதற்கான அபராதத்தை செலுத்தும்படியும்   டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார்.  பாவ்னா உடமைகளை தூக்கி வெளியே எறிந்து   பாவ்னாவை பிடித்து வெளியே தள்ளியும் விட்டுள்ளார். இதில் நிலைதடுமாறிய பாவ்னா ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார். சக  பயணிகள் உடனடியாக அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.  
  கீழே விழுந்த பவ்னாவின் பின் தலை கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.  உயிருக்கு ஆபத்தான நிலையில் பாவ்னா மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   பாவ்னா மாட்டிக்கொண்டதும்  தப்பியோடிய டிக்கெட் பரிசோதகரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!