கோர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்... ரெண்டு முறை தலைகீழாக சுழற்றிய பைக்!

 
டிடிஎப் வாசன்

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் படுகாயமடைந்துள்ளார். ஆபத்தான வகையில் வீலிங் செய்த போது, இந்த விபரீதம் நேர்ந்தது. கையில் எலும்பு முறிந்ததால், ப்ளேட் வைத்து அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. பைக் இருமுறை தலைகீழாக தூக்கி வீசப்பட்டது. இது குறித்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் கொண்டிருந்த போது டிடிஎஃப் வாசன் வீலிங் செய்தார். அப்போது எதிர்பாராத வகையில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். நெடுஞ்சாலையில் பைக் இரு முறை தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவருக்கு கை எலும்புகள் நொறுங்கியது. பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே சாகசம் செய்ய முயன்ற போது சாலையோர பள்ளத்தில் டிடிஃஎப் வாசன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.


விபத்தில் படுகாயமடைந்த டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கையில் எலும்பு  முறிவுக்காக ப்ளேட் வைத்து அறுவை சிகிச்சை நடைப்பெற்றது.

சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் பயணம் செய்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் விதிகளை மீறி வீலிங் செய்ததால் விபத்து நேர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த டிடிஎப் வாசன், இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அதனை யூட்யூபில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவரது பைக் சாகசங்கள் இளைஞர்களிடையே பரவலாக ரசிக்கப்பட்டு வந்த நிலையில், யூட்யூப்பில் பிரபலமடைந்தார்.

ஒரு கட்டத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி SPEEDO METER இல் வாகனம் செல்லும் வேகத்தை பதிவு செய்து அதனை தனது "twin throttles" youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார். இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. இதன் காரணமாக டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் எனும் படத்தில் ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை