துபாய் பயணத்துல ரூ.6,100 கோடி ஒப்பந்தம்.. ஸ்பெயின்ல ரூ.3,440 கோடி ஒப்பந்தம்.. இதுவரை ஒரு ரூபாய் கூட வந்து சேரலை... டாக்டர் ராமதாஸ் பேட்டி!
முதல்வரின் துபாய் பயணத்தின் போது ரூ.6,100 கோடி முதலீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஸ்பெயின் பயணத்தில் ரூ.3,440 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், இது வரையில் ரூ.1 கூட வந்து சேரவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். மேலும், தமிழக அமைச்சரவை வரும் ஆகஸ்ட் 13ம் தேதி கூட உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதல்வர் முடிவெடுக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று காலை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “ கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். 2023-ம் ஆண்டு துபாய் சென்ற முதல்வர் ரூ.6,100 கோடிக்கான மூதலீடுகளை ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3,440 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட முதலீடு வந்துசேரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டார் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது எனத் தெரியவில்லை.

வன்னியகளுக்கான இட ஒதுக்கீட்டில் திமுகவின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும். இட ஒதுக்கீடு தொடர்பாக 35 ஆண்டுகால வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த திமுக தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஆகஸ்ட் 13-ல் முதல்வர் கூட்டி இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கவேண்டும்” என்று கூறினார்
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
