தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார்... அமைச்சர் துரைமுருகன்!

 
விஜய்
 

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்  துரைமுருகன், "கரூர் வழக்கில் நீதிபதிகள் சொல்வதை கேட்டுக் கொண்டுதான் ஆக வேண்டும். 

தவெக விஜய்

ஆனால் உண்மையை சொல்லி இருக்கிறார்கள். அதிக தொகுதிகளில் வெல்வோம் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சொல்வார்கள். ஒரு கட்சியின் தலைவர் அவரது கட்சிக்கேற்ப பேசுகிறார். கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் விஜய்யை கைது செய்வோம். தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டோம். கரூர் விவகாரத்தில் யாரும் செந்தில் பாலாஜியை குறை சொல்லவில்லை. 

விஜய்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் சம்பவ இடத்திற்கு செல்லாதது அன்றைய சூழ்நிலை வேறு. இன்று 41 பேர் உயிரிழந்திருப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. உலகமே இதைப்பற்றி பேசுகிறது. அதனால் முதல்வர் உடனே சென்றிருக்கிறார்" என விளக்கம் அளித்துள்ளார்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?