நடிகர் அஜீத்தின் நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு.!

 
வெற்றி துரைசாமி

பிப்ரவரி 4ம் தேதி  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதில் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து கார் மலையின் மீதிருந்து சட்லெஜ் நதிக்குள் பாயந்தது.  இதில் ஓட்டுனர் உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றி துரைசாமியின் உடல் தேடியும் கிடைக்கவில்லை. இந்திய கடற்படையின் உதவி நாடப்பட்டது. தீயணைப்பு துறையினர் தேடி கையைவிரித்து விட்டனர். மகனை கண்டுபிடித்தால் ஒரு கோடி அளிக்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்தார். இந்நிலையில் இன்று  விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

வெற்றி

8 நாட்களுக்கு  பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியில் இருந்து  மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றோடு 8 நாட்களையும் கடந்து, சைதை துரைசாமியை தேடும் வேட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் சென்னை முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கி மாயமானார். தொடர்ந்து வெற்றி துரைசாமியைத் தேடி வந்த நிலையில், ஆற்றின் ஓரத்தில், பாறைகளின் இடுக்கில் கிடைத்த மூளையின் திசு வெற்றி துரைசாமியுடையதா? என்பதை கண்டறிய அவரது குடும்பத்தினருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இன்று டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர் சைதை துரைசாமி. பல மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார். தற்போதும் உதவி வருகிறார். அவருடைய நல்ல மனசுக்காகவாது வெற்றி துரைசாமிக்கு எதுவும் ஆகி விடக் கூடாது. நலமுடன் திரும்பி வர வேண்டுமென தமிழகமே பிரார்த்திக்கிறது.

வெற்றி

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாசலப் பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத் என்பவரும் சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றி துரைசாமி காரில் விமான நிலையம் புறப்பட்டார்.

அந்த கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. இதில், வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 7நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. விபத்து நடந்த இடத்தை சுற்றி 3 கிலோமீட்டர் தூரத்தில் தேடியும் வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இந்நிலையில், போலீசார், ராணுவ வீரர்கள், டைவிங் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் 8வது நாளாக தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதை அவரின் குடும்பத்தார் டிஎன்ஏ உடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வெற்றி துரைசாமியின் குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு மேல் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியாது என போலீசாரிடம் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து நேற்று காலை மருத்துவமனையில் வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் இமாச்சல் பிரதேசத்தில் கிடைத்த மூளை திசுவின் டிஎன்ஏவும், வெற்றி துரைசாமியின் குடும்பத்தினரின் டிஎன்ஏவும் ஒப்பீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web