தசரா திருவிழா நிறைவு... மீன் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா திருவிழா நிறைவு பெற்றதையடுத்து, மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தசரா, நவராத்திரி திருவிழா காரணமாக கடந்த 10 நாட்களாக அசைவ வகை உணவுப் பொருள்கள் விற்பனை மந்தமாக இருந்தது.

இந்நிலையில், தசரா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மீன்களை வாங்க திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். சனிக்கிழமை மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில், மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதன் காரணமாக, மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ. 1100 வரையும், விளை மீன், ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் ரூ. 500 முதல் ரூ. 600 வரையும், சூப்பர் நண்டு ரூ. 700 வரையும், நெத்திலி ஒரு கூடை ரூ. 3000 வரையும், முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 1000 வரையும் விற்பனையானது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
