‘என் நெஞ்சில் குடியிருக்கும்...’ நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்ட விஜய்!

 
விஜய்

நேற்று அதிரடியாக அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு திரைத்துறையில் இருந்தும், பிற கட்சியினரிடம் இருந்தும் வாழ்த்துக்களும், வரவேற்பும், எதிர்ப்புகளும், கிண்டல்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கட்சிக்கு தலைவராக விஜய் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விரைவில் முக்கிய நிர்வாகிகளின் பட்டியலையும் அவர் வெளியிட உள்ளார். நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சீமான், அண்ணாமலை உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்

அந்த அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web