2வது நாளாக மியான்மரில் இன்றும் நிலநடுக்கம்!

 
நீ…..ண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி தகவல்!
 


 
மியான்மரில் 2 வது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து  நிலஅதிர்வு மைய அறிக்கையில்  இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 09.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அட்சரேகை 24.70 ஆகவும், நீளம் 94.89 ஆகவும், இதன் ஆழம் 90 கி.மீட்டரிலும் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவாகியுள்ளது.  
முன்னதாக நேற்று அதிகாலை மியான்மரை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம்  97.61 நீளத்திலும், 60 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டது.மிதமான நிலநடுக்கங்கள் ஆழமாக ஏற்படும் நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை. ஏனெனில் ஆழமற்ற நில அதிர்வுகளிலிருந்து ஏற்படும் நிலஅதிர்வு அலைகள் மேற்பரப்புக்குப் பயணிக்கக் குறுகிய தூரத்தைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக வலுவான நில அதிர்வு மற்றும் கட்டமைப்புகளுக்கு அதிக அளவில் சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடான மியான்மரில்  மார்ச் 28 ம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 3000க்கும்  மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?