கர்நாடகாவில் திடீர் நிலநடுக்கம்....!

 
நிலநடுக்கம்
 

கர்நாடகா மாநிலம் விஜயபுரம் அருகே இன்று (நவம்பர் 4) காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.19 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகக் காணப்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் ஆழமற்றதாக இருந்ததால், மையப்பகுதிக்கு அருகில் உள்ள சில பகுதிகளில் மெதுவாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின் சரியான அளவு, மையப்பகுதி, ஆழம் உள்ளிட்ட விவரங்கள் தற்போது நிலநடுக்கவியல் நிபுணர்களால் மறுஆய்வு செய்யப்படுகின்றன.

நிலநடுக்கம்

மையப்பகுதியான பிஜாப்பூரில் (சுமார் 2.7 இலட்சம் மக்கள் தொகை) நிலநடுக்கம் குறைந்த அளவில் உணரப்பட்டதாகவும், உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அருகிலுள்ள இண்டி, பசவனா பாகேவாடி, சிந்துகி உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு சிறிதளவு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!