4.2 ரிக்டர் அளவில் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்... வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்!
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, மகாராஷ்டிராவில் அமராவதியில் இன்று பிற்பகல் 1.37-க்கு ரிக்டர் அளவில் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என அமராவதி துணை கலெக்டர் அனில் பட்கர் உறுதி செய்துள்ளார். அமராவதியில் சிக்கல்தாரா, கட்கும்ப், சுர்னி, பச்டோங்ரி தாலுக்காக்கள் மற்றும் மேல்காட் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
சில இடங்களில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர். மாவட்டத்தின் பரத்வாடா நகரின் சில பகுதிகளிலும், அகோட் பகுதிகளில் உள்ள தர்னியிலும் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அனில் பட்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!