நேபாளத்தில் 4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்!
கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் பிற்பகல் 2.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை.

தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின்படி, காத்மாண்டுவிலிருந்து சுமார் 150 கி.மீ கிழக்கே உள்ள ரமேச்சாப் மாவட்டத்தின் வடைலி பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 17ம் தேதியும் இதே மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இமயமலையின் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்திருப்பதால் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
