பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு!
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
