டாப் 50 ஆசிய பிரபலங்கள்.. தென்னிந்தியாவில் நடிகர் விஜய் மட்டுமே 10 இடங்களுக்குள் முன்னேற்றம்..!!

 
டாப் 50 ஆசிய பிரபலங்கள்

டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் விஜய் மட்டுமே 10 வது இடங்களுக்கு முன்னேறியுள்ளார்.

பிரபல லண்டன் வார இதழான ‘ஈஸ்டர்ன் ஐ’ 2023ஆம் ஆண்டின் டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களின் தொடர்ச்சியான வெற்றியும், அதன் மூலம் பாலிவுட் திரையுலகின் உத்வேகத்தை அதிகரித்ததும் முதல் இடத்தைப் பிடிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பட்டியலில் நடிகை ஆலியா பட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

‘தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான ஆலியா பட் வெளிநாட்டு ரசிகர்களையும் குவித்துள்ளார். இந்த ஆண்டு ‘சிட்டாடல்’, ‘லவ் அகைன்’ ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பஞ்சாபி திரை நட்சத்திரம் தில்ஜித் தோசன்ஜ் 4வது இடத்திலும், பாடகர் சார்லி எக்ஸ்சிஎக்ஸ் 5வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 6வது இடத்தில் உள்ளார். பாடகி ஸ்ரேயா கோஷல் 7வது இடத்தில் உள்ளார். 8வது இடம் நடிகர் விஜய். முதல் 10 இடங்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் விஜய் மட்டும்தான்.

இந்தாண்டு வெற்றியும் மகிழ்ச்சியும் நிறையட்டும்" - பிரபலங்கள் வாழ்த்தில்  விஜய் | nakkheeran

அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் நடிகர் வஹாஜ் அலி 9வது இடத்திலும், ‘தி மார்வெல்ஸ்’ புகழ் இமான் வெல்லானி 10வது இடத்திலும் உள்ளனர். அமிதாப் பச்சன், அரிஜித் சிங், தீபிகா படுகோன், அனில் கபூர், அர்மான் மாலிக் போன்ற இந்திய பிரபலங்களும் இந்த டாப் 50 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web