பாராட்ட மனசில்லாம எடப்பாடி புலம்பி தவிக்கிறார் - மேயர் பிரியா!

 
மேயர் ப்ரியா

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட மனமின்றி பொறாமையிலும், ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார் என்று சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள மேயர் பிரியா ராஜன், தனது பதிவில், “கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சர் அவர்களின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை!
கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார்கள். அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.



திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று அம்மா உணவகத்தில், உணவின் தரத்தை பரிசோதித்த முதல்வர், தான் எச்சில் படுத்திய உணவை அப்படியே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வைத்திருந்த உணவில் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி, வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!