நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்.. அசைவ பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் முக்கிய முட்டை உற்பத்தி மையமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, புதிய சாதனையை எட்டியுள்ளது. இம்மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படும் இப்பகுதியில், தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முதன்மையாக அனுப்பப்படுகின்றன. அதேபோல் வெளிநாடுகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக முட்டை கொள்முதல் விலை 590 காசுகளாக நிலைத்து வந்த நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் முட்டை கொள்முதல் விலை 595 காசுகளாக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த கொள்முதல் விலையாகும்.

தேவை அதிகரிப்பதால் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர். முட்டை விலை மேலும் உயரும் வாய்ப்பும் உள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதே நேரத்தில் சில்லறை விற்பனை கடைகளில் முட்டை ஒன்று ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
முட்டை விலை உயர்வு, நீண்ட காலம் குறைந்த விலையில் சிக்கியிருந்த பண்ணைத் தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் ஊக்கத்தை அளித்து உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
