ஏக குஷி... பெண்களுக்கான அசத்தல் பட்ஜெட் அப்டேட்!

 
பெண்கள்

பெண்கள் ஏக குஷியில் உள்ளனர். இன்று தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பெண்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளதால், விடுபட்டவர்களுக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  இந்தாண்டுக்கான பட்ஜெட் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அடையாறு

வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில்  பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ.430 கோடியில் புதிய திட்டம்.

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அதே போன்று 2030க்குள் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளின் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கீடு,

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு, ஊரகப் பகுதிகளில் 2,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க ரூ. 365 கோடி ஒதுக்கீடு, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்

79 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக ரூ. 3300 நிதி ஒதுக்கீடு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,482 கிராமங்களுக்கு ரூ. 1147 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

2 ஆண்டுகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்த திட்டம் வகுக்கப்படும். ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் புதிதாக 10000 சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web