பிரபல மாலில் வேட்டி அணிந்து வந்த முதியவருக்கு அனுமதி மறுப்பு.. வலுக்கும் கண்டனங்கள்!

 
ஜிடி மால்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், முதியவர் ஒருவர் வேட்டி கட்டிச் சென்றதால், வணிக வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜிடி மாலில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது. வேட்டி சட்டை அணிந்த முதியவர் திரைப்படம் பார்க்க மாலுக்கு வந்துள்ளார். இந்நிலையில், வேட்டி சட்டை அணிந்து வருபவர்கள் மாலுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும், மாற்று உடை அணிந்து வந்தால் ஏற்றுக்கொள்வதாகவும் மால் ஊழியர்கள் தெரிவித்தனர்.


முன் பதிவு செய்யப்பட்ட திரைப்பட டிக்கெட்டை வைத்திருந்தாலும் முதியவரை அனுமதிக்க கூடாது என்பது தங்களின் மால் கொள்கைகளில் ஒன்று என்று கூறியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டியை கூட உள்ளே அனுமதிக்காத மால் நிர்வாகத்தை கண்டித்து வருகின்றனர். இது கலாச்சார தீண்டாமை என்றும் வாதிடப்படுகிறது. இதனிடையே, வீடியோ சர்ச்சையான நிலையில் மால் நிர்வாகம் முதியவரை சால்வை அணிவித்து சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!