தேர்தல் திருவிழா... நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் அதிரடி... அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!

 
விஜய்

மக்களவை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கி உள்ளது. நேற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சென்னையில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், 2 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த பிப்ரவர் 2-ம் தேதி அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், நடிகர் விஜயின் அரசியல் வருகை அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாத களமாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


விஜய், தமிழகத்தில் தனக்கு பெண்களுக்கு வாக்கு வங்கி இருப்பதாக உறுதியாக நம்புகிறார். கட்-அவுட், பேனர், போஸ்டர் ஒட்டுவது, களப்பணியாற்றுவது போன்றவைகளுக்கு தனது ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அது ரசிகர்களின் வோட்டுக்களாக மட்டுமே இருக்கும். ரசிகைகளின் வோட்டு தான் குடும்ப வாக்குகளாக மாறும் என்பதால், அதிகளவில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

ஆரம்பிச்சுட்டாய்ங்க...! வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்று, தொகுதிவாரியான கட்சி உட்கட்டமைப்பு பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நேற்று பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், 2 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என முடிவெடுத்திருப்பது அரசியல் தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே 2 கோடி பேர் டார்கெட் வைத்து வேலைச் செய்து வருவதால், அதிகளவில் திமுக, அதிமுக வாக்குகள் சிதறும் என்கிற கவலையில் இருக்கின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web