நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்... செப்.30க்குள் தயாராக தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு உத்தரவு!
பீகார் மாநிலத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணியின் மூலம் பீகாரில் இருந்த 7.24 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இது வாக்கு திருட்டு என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று திரிபுரா, அருணாச்சல பிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி பீகாரில் நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்து உள்ளது. இது குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு 30ம் தேதிக்குள் தயாராக இருக்கும்படி அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. அவரவர் மாநிலங்களில் கடைசியாக நடந்த திருத்தப்பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாராக வைத்திருக்கும்படியும் கூறப்பட்டுள்ளது. எனவே, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இப்பணி தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
