மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் ... ஊதிய உயர்வு கோரி போராட்டம்!
புதுச்சேரியில் மின்சார பேருந்து ஓட்டுநர்கள், தமிழகத்தில் மின்சார பேருந்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு இணையான ஊதியம் மற்றும் தினப்படி வழங்க வேண்டும் எனக் கோரி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மின்சார பேருந்து சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.23 கோடி மதிப்பில் புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் 25 மின்சார பேருந்துகள் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கப்பட்டன. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி இணைந்து சேவையை தொடங்கி வைத்தனர். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட இந்த சேவை பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது.

ஆனால், தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட 75 பேருக்கு மாதம் ரூ.21,000 என கூறப்பட்ட ஊதியத்தில் பிடித்தங்களுக்குப் பிறகு ரூ.17,000 மட்டுமே வழங்கப்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஊதிய உயர்வு மற்றும் நிரந்தர பணி கோரிய அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்சார பேருந்து சேவை தொடங்கி வெறும் 10 நாள்களிலேயே இந்த வேலைநிறுத்தம் நடந்தது புதுச்சேரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
