இன்று முதல் மின்சார ரயில் சேவை நேரம், தூரம் நீட்டிப்பு.. பயணிகள் வரவேற்பு!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

சமீப காலமாக   சென்னையில் இருந்து வெளியூர் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.  கிளாம்பாக்கம் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இருந்தபோதிலும் பயணிகள் பொதுபோக்குவரத்துக்கு அல்லாடி வரும் நிலையில்  கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று முதல் இரவு நேரங்களிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. . கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்   டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.   கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, திருச்சி, செங்கோட்டை, விழுப்புரம், தஞ்சை  மாவட்டங்களுக்கு கிளம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

புறநகர் ரயில்


தெற்கு ரயில்வே பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வசதியாக வண்டலூர் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான   கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து  தெற்கு ரயில்வே  சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  "கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் வேகமாகவே நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.  மேலும், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் 5 மின்சார ரயில்கள் திங்கட்கிழமை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.  

மின்சார ரயில்


சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில்  தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.  
மார்ச் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும்  சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும்   மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு  வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web