தாம்பரத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின்சார ரயில்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்கின்றனர். இவர்களின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார இறுதி நாள்களின் விடுமுறையும் வருவதால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி செல்பவர்களில் ஒரு சிலர் பேருந்துகளிலும், இன்னும் ஒரு சிலர் ரயில்களிலும் செல்வர். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரு சிறப்பு மின்சார ரயில்கள் இன்று இரவு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
