மின்சார ரயில்கள் ரத்து: இன்று முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

 
ரயில்
இன்று காலை முதல் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜூலை 23ம் தேதி செவ்வாய்க்கிழமை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ஆகஸ்ட் 14ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

அரசுப் பேருந்து

இதனையடுத்து  தற்போது கூடுதலாக சிறப்பு ரயில் சேவைகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை ‌ வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. மேலும்  சென்னை கடற்கரை-பல்லாவரம் மற்றும் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி  பகுதிகளிலும் இரு மார்க்கங்களிலும் சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

மின்சார ரயில்களை அலுவலகத்திற்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என்று தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் வசதிக்காக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் அதிகளவு  பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web