அட.. காசாவில் நியூட்டன்.. குப்பையிலிருந்து மின்சாரம் ... 15 வயது சிறுவன் அசத்தல் சாதனை.. !

 
இஸ்ரேல் நியூட்டன்

இஸ்ரேல் காசா போர் காரணமாக அப்பகுதியில் திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அநீதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அந்நாட்டில் வாழ்ந்து வந்தவர்கள் லட்சக்கணக்கானோர்  கிடைத்ததை கையில் பிடித்து கொண்டு அகதிகளாக வெளியேறிவிட்டனர். மீதமிருக்கும் பொதுமக்கள் வாழ்வில் சாதாரண ஒரு நாளை சந்தித்து விடமாட்டாமோ என்ற ஏக்கத்துடன் போர் நிறுத்த அறிவிப்புக்காக காத்துக் கிடக்கின்றனர்.  பல நாட்களாக குடிநீர், உணவு, மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கின்றனர். இவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக  இருளுக்கு ஒளி காட்டும் நிலவாக சிறுவன் ஒருவன்   உருவாகியுள்ளான்.

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளுக்குப் போராடும் காஸா மக்களின் வாழ்வில் இளம் விஞ்ஞானி ஒருவர் வெளிச்சம் போட்டுள்ளார். 15 வயதான ஹுஸாம் அல்-அத்தர் 'காசாவின் நியூட்டன்' என்று அழைக்கப்படுகிறார். கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து மோசமான நிலையில் உள்ள காஸாவில் கிடைத்த பொருட்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்துள்ளார் இந்த சிறுவன்.


இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதல்களுக்கு பயந்து இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களில் காற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஹுஸாம் சாத்தியமாக்கியுள்ளார். இந்த சிறுவனுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 'என் சகோதரர்களை இருளில் பார்த்தேன். அவர்கள் கண்களில் பயத்தை மட்டுமே பார்த்தேன். "நான் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஒளியையும் கொடுக்க விரும்பினேன்,என " ஹுஸாம் கூறினார்.

இஸ்ரேல் காசா முழுவதையும் இருளில் மூழ்கடித்திருக்கும் போது, ​​இந்த சிறுவனின் முயற்சி இருளில் ஒரு பிரகாசமான வெளிச்சம். இணையத்தளங்களிலும் அல் ஜசீரா போன்ற முக்கிய ஊடகங்களிலும் அவரது வெளிச்சம் வலம் வருகிறது. பல கண்டுபிடிப்புகள் செய்ய வேண்டும் என்றார். சிறுவயதிலிருந்தே தன் மகன் திறமைசாலி என்றும், இந்த சமுதாயத்திற்கு உதவும் பல கண்டுபிடிப்புகளை செய்வார் என்றும் அவரது தாய் கூறுகிறார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web