கொள்ளிடம் ஆற்றில் விழுந்த மின்னழுத்த கோபுரம்..!

 
கொள்ளிடம்
 

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால்  அப்பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டு உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் இருந்தது. இதனை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மின்கோபுரம் சரிந்து விழுந்து தண்ணீரில் மூழ்கியது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழகத்திலும்  பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலம் அருகே ஒரு லட்சத்து 10000  மெகாவாட் கொண்ட உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்கோபுரம்  கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள நிலையில்  மின்கோபுரம் அமைந்துள்ள பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கோபுரத்தின் அடிப்பகுதி பலவீனமானதோடு மின்கோபுரம் திடீரென்று சாய்ந்து நின்றது. எப்போது வேண்டுமானாலும் மின்கோபுரம் சரிந்து தண்ணீக்குள் விழலாம் என்ற நிலை உருவாகி இருந்தது. இது குறித்து  உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும் மின்கோபுரத்தை சரிசெய்யும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தகைய சூழலில் மின்வாரிய பணியாளர்களின் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.அதற்குள்  இன்று அதிகாலை 5 மணிக்கு  சாய்ந்து நின்ற மின்கோபுரம் சரிந்து தண்ணீருக்குள் விழுந்து மொத்தமாக மூழ்கியது. மேலும் மின்கோபுரத்தின் வயர்கள் நேப்பியர் பாலத்தின் மீது விழுந்தன. முன்கூட்டியே மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நேப்பியர் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் மாற்று வழியாக மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றுக்குள் உயர் மின்னழுத்த கோபுரம் சரிந்து விழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!