யானை மின்சாரம் தாக்கி பலி... தொடரும் சோகம்...!!

 
யானை

 காடுகளை அழித்து குடியிருப்பு பகுதிகள் உருவாகி வருகின்றன. இதனால் காடுகளில் வசித்து வரும் உயிரினங்கள் அனைத்தும் தங்கள் வசிப்பிடங்களைத் தேடி ஊருக்குள் நுழைந்து விடுகின்றன. வனவிலங்குகள் வீட்டுக்கு வந்துவிட்டன என கூப்பாடு போடும்  பொதுமக்கள் அதன் வசிப்பிடங்களில் தான் மனித இனம் ஆக்கிரமித்துள்ளது என்பதை உணர்வதும் இல்லை. ஒத்துக் கொள்வதும் கிடையாது.

யானை

இதனால் பல நேரங்களில் வனவிலங்குகள் தான் ஆபத்தை சந்திக்கின்றன. மனிதர்களால் தனக்கு ஊறு விளையுமோ என அஞ்சி அஞ்சி தான் அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது.  அதிலும் நீலகிரி மாவட்டம் முழுவதுமே வனப்பகுதிகள் தான். இதனால் இந்த வனப்பகுதியில் வசிக்கும் யானை, சிங்கம், கரடி, புலி சிறுத்தை உட்பட அனைத்து உயிரினங்களுமே ஊருக்குள் வந்து விடும் .

யானை

இவை விளைநிலங்களை பாழ்படுத்தி விடும் என மின்வேலி அமைத்து அதை தடுத்து வருகின்றனர். ஆனால் விலங்குகள் தெரியாமல் வந்து சிக்கிக் கொள்கின்றன. அந்த வகையில்  கூடலூர் அருகே புளியம்பாறையில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. யானை சாய்த்த மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web