நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்த எலான் மஸ்க்... முதலிடத்தை பிடித்த ஜெஃப் பெசோஸ்!

 
ஜெப் பெசோஸ் எலான் மஸ்க்

 உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்  முதலிடத்தை பிடித்தவர்  எலான் மஸ்க். இவர் சில காலத்திற்கு முன்பு ட்விட்டரை விலைக்கு வாங்கி அதனை எக்ஸ் தளமாக பதிவு செய்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.  தற்போது உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை எலான் மஸ்க் இழந்துள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  


 

தற்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர்  அந்தஸ்த்தை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-ன் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மார்ச் 4ம் தேதி நேற்று திங்கட்கிழமை டெஸ்லா பங்குகள் 7.2% அளவில் சரிந்தன. இதனையடுத்து  இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.

ஜெப் பெசோஸ் எலான் மஸ்க்
 

அதே சமயம் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை  அமேசான் பங்குகளில் இருந்து பெறுகிறார் தற்போது எலான் மஸ்க் $197.7 பில்லியன் நிகர மதிப்புகளை   கொண்டுள்ளார்.
 அதே நேரத்தில் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு $200.3 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 2021க்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் தரவரிசையில் பெசோஸ் முதல்முறையாகத் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.   ஜெஃப் பெசோஸ்  2017ம் ஆண்டு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்சை காட்டிலும்  உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web