40 ஆடியோ... சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த பெண் போலீஸ்!

 
இன்ஸ்பெக்டர்
 

தூத்துக்குடியைச் சேர்ந்த 35 வயது சப்-இன்ஸ்பெக்டர், போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் படி, அந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிபுரியும் பிரிவில் கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து ஒரு பெண் போலீஸ் மாற்றுப்பணியாக வந்துள்ளார். திருமணமான அவர், கணவரும் குழந்தைகளும் உடையவர். ஆனால், அந்த பெண் போலீஸ், ஒரு நிருபருடன் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை சிக்கவைத்து பணம் பறிக்கத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ்

அதன்படி, அந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருடன் நெருங்கி பழகியபோது, வாட்ஸ்-அப் வழியாக நடந்த தனிப்பட்ட உரையாடல்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ பதிவுகளை சேமித்தார். பின்னர் அவற்றை வெளியில் விடுவோம் என மிரட்டி பணம் கேட்க தொடங்கினார். இதனால் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி, பெண் போலீஸ் சில ஆடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தொடர்ந்து செப்டம்பர் 17-ஆம் தேதி, சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியையும் உறவினர்களையும் அழைத்து, தன்னிடம் 40-க்கும் மேற்பட்ட ஆடியோ, 20-க்கும் மேற்பட்ட வீடியோ உள்ளதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, கோவில்பட்டி போலீசார் பெண் போலீஸ், நிருபர் உள்ளிட்ட 5 பேர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம், போலீஸ் துறையிலும், ஊடகத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!