தமிழகத்தில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு... ஸ்பெயினில் ரூ2500 கோடியில் ஒப்பந்தம்... !

 
ஸ்பெயின்

தமிழக முதல்வர் ஸ்டாலின்   தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயினுக்கு  அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.  ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து  முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். தமிழகம் தொழில் வளர்ச்சியில் வளர்ந்து வரும் அதே நேரத்தில்   சரக்கு போக்குவரத்தினை திறமையாகக் கையாளுவதும்  மிகவும் அவசியமானதாகிறது.  

ஸ்டாலின்

இதற்காக தமிழகத்தில் உள்ள  4 பேரும் துறைமுகங்கள் மூலம்   சரக்குகளைக் கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை அமைக்க தமிழக அரசு  பல்வேறு முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றது.  அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும்   ஹபக் லாய்டு நிறுவனத்துடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில்  தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில், ரூ2500 கோடி  முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டாலின்

இம்முதலீட்டால் தமிழகத்தில்  1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும். அத்துடன்  தமிழகத்தின்  எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.இதனையடுத்து   சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் Laura Berjano, International and Institutional Relations Head டமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில்  இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழகத்தில் உள்ளன.    தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web