காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே மோதல்!

 
பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே மோதல் நடைபெற்றது.  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீர்

இந்நிலையில், காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டம் கேஷ்வான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

பயங்கரவாதிகள்

தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கி சூடு மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?