முடிவுக்கு வந்த பேடிஎம்... பயனர்கள் அதிர்ச்சி... !

 
பேடிஎம்

ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு பல வகையான ஆப்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது பேடிஎம். இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில் 2022 மார்ச் 11 முதல் பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைக்க தடை விதித்து வந்தது. பேடிஎம் நிறுவனம் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றவில்லை என விளக்கம் அளித்துள்ளது.  

பேடிஎம்

இதனையடுத்து புதிதாக வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவோ வாடிக்கையாளர்களின் கணக்குக்களில் வரவு  செய்யவோ கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ப்ரீபெய்ட் வசதிகள் வாலெட்கள், பாஸ்டேக், போக்குவரத்து அட்டை போன்ற சேவைகளை மேற்கொள்ள பேடிஎம்முக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  பிப்ரவரி 29 முதல் இந்த தடை அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.  

பேடிஎம்

வாடிக்கையாளர்களை பொறுத்த வரை ஏற்கனவே பணத்தை இருப்பு வைத்திருப்பவர்கள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.  அதே நேரத்தில் பேடிஎம்-இல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும் பண பரிமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  பிப்ரவரி 29 முதல் இந்த  கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web