4 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

 
செந்தில் பாலாஜி

கடந்த ஆட்சிக் காலத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததில்  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால்  அமைச்சர்  செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது  ஜாமீன் மனு நேற்று சென்னை மாவட்ட  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

செந்தில் பாலாஜி


இவரது வழக்கில்   அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரியுள்ளார். இதன் அடிப்படையில் நீதிபதி செப்டம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.  இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி  வருகின்றனர்.  

செந்தில் பாலாஜி ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பரின் வீட்டிலும்   செந்தில் பாலாஜியின் பிற நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்  தொடர்பில் இருந்து வரும்  கோவை, கரூர், நாமக்கல். திருச்சி  ஆகிய  இடங்களிலும்  சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே 3 முறை சோதனை நடந்த நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web