41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம்.. இந்தியா அசத்தல் சாதனை!!

 
இந்தியா

சீனாவில் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்   நடைபெற்று வருகின்றன.  இந்தியாவில் இருந்து பல்வேறு பிரிவுகளில்  வீரர், வீராங்கனைகள் சீனாவிற்கு விளையாடி வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஈக்வஸ்டேரியன் என்ற குதிரையேற்ற விளையாட்டின் டிரஸ்ஸாஜ் அணி பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளது.  



திவ்ய கீர்த்தி சிங், சுதிப்தி ஹஜிலா, ஹிருதய் விபுல் சத்தா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றுள்ளனர். இந்த பிரிவில் 2ம் இடத்தை சீனாவும், 3ம் இடத்தை ஹாங்காங்கும் பிடித்துள்ளது. கடந்த 1982ல் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரை ஏற்றத்தில் இந்தியா தங்கம் வென்று இருந்தது . அதன் பிறகு தங்கம் வெல்வது இதுவே 2வது முறை.

ஆசிய விளையாட்டு போட்டி


அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது . பல்வேறு தரப்பிலிருந்தும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்   இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web