நெல்லையில் பரபரப்பு... திமுக கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்!

 
துரைமுருகன்

இந்த மழையில் இதெல்லாம் தேவையா என்கிறார்கள் திமுக தொண்டர்கள். தினந்தோறும் காலையில் எழுந்திருக்கும் போது, இன்னைக்கு என்ன பிரச்சனை என்றே எழுந்திருக்கிறேன் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சொல்லியும் பதவியில் இருக்கிற உடன்பிறப்புகள் திருந்துவதாக இல்லை. இந்நிலையில், திருநெல்வேலியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 அண்ணா- கலைஞர் அறிவாலயம்
இன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சி கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர் மற்றும் மாநகர பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் இடைநீக்கம் செய்து  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

nellai

நெல்லை மாநகராட்சியில் மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்த நிலையில், நெல்லை கவுன்சிலர்களும் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு அவ்வப்போது வந்து புகார் பட்டியலைத் தந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இம்மாதம் 21ம் தேதி பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக  கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர்.  

குறைத்தீர்ப்பு முகாமில் மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் என யாருமே இல்லாததன் காரணமாக ஆத்திரமடைந்த அவர்கள் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட துவங்கினார்கள். நெல்லையில் குடிநீர் வசதி, சாலை உட்பட அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மேயர் முன்னுரிமை கொடுப்பதில்லை என்று திமுக கவுன்சிலர்கள், திமுகவைச் சேர்ந்த மேயருக்கு எதிராக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web