நெல்லையில் பரபரப்பு... லாரியில் உடல் நசுங்கி 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!
கங்கைகொண்டான் ராஜா புதுக்குடியை சேர்ந்த தாய், மகன் மற்றும் பேரக் குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகனம் ஒன்றில் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்துள்ளனர்.
#Tirunelveli சாலை விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு#Nellai #nellaiaccident #dead #ETVBharattamilnadu pic.twitter.com/5AgzLgHKA1
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 17, 2024
அவர்களது வாகனம் மணிமூர்த்தீஸ்வரம் விலக்கு அருகே சென்றுக் கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றதில், லாரி அவர்களின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் இடித்துத் தள்ளியது. இதில் 4 பேரும் லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
