போட்றா வெடிய... ஒரே நாளில் 2 வது முறையாக குறைந்த தங்கம்... !

 
தங்கம்

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக். 28) காலை மற்றும் மாலை என இருவேளையும் கடுமையாகக் குறைந்தது. வாரத்தின் இரண்டாவது நாளான இன்று தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது.

தங்கம்

தீபாவளிக்கு முன் உயர்ந்து இருந்த தங்க விலை, பண்டிகைக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.90,400-க்கும், கிராம் ஒன்றுக்கு ரூ.150 குறைந்து ரூ.11,300-க்கும் விற்பனையாகியது. ஆனால் மாலை நேரத்தில் விலை மேலும் சரிந்தது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

அதன்படி, மாலை நிலவரப்படி கிராம் ஒன்றுக்கு ரூ.225 குறைந்து ரூ.11,075-க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.88,600-க்கும் விற்பனையாகியுள்ளது. இதனால் ஒரே நாளில் தங்கம் விலை மொத்தம் ரூ.3,000 வரை சரிந்துள்ளது. வெள்ளி விலை ரூ.165 என்ற அளவில் மாற்றமின்றி நீடிக்கிறது. தங்க விலை தொடர்ந்து குறைவது நுகர்வோருக்கு ஆறுதலாக உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!