வெடித்து சிதறிய சிலிண்டர் லாரி... 2 பேர் பலி...272 பேர் படுகாயம்...அதிர்ச்சி வீடியோ... !

 
தீவிபத்து

 
ஆப்பிரிக்காவில்   கென்யா சற்றே வளர்ந்த நாடு. இதில்  மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்,  போதுமான அளவு சாலை வசதிகள் மற்றும் மக்களுக்கு தேவையான எரிவாயு அனைத்தும் அரசு சார்பில்  முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.  ஆப்பிரிக்காவின்  மற்ற  நாடுகளை ஒப்பிடும்போது கென்யாவில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் சீராக இருப்பதாக கருத்து நிலவி வருகிறது.இந்நிலையில் கென்யாவின் தலைநகர் நைரோபி   எம்பகாசி பகுதியில், நேற்று இரவு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு லாரி  சென்று கொண்டிருந்தது.

திடீரென லாரியில் இருந்த ஒரு சிலிண்டர் வெடித்து சிதறியதால் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த கோர  தீவிபத்தில், லாரியில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்து சிதறத் தொடங்கின.  வெடித்து சிதறிய சிலிண்டர்கள் அனைத்தும் அருகில் இருந்த வீடுகள், கடைகள், அந்த பகுதியில் இருந்த  பொதுமக்கள் மீதும் விழுந்ததால் தீ மளமளவென பரவத் தொடங்கியது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைப்பதற்காக நேற்று இரவு முதல் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  271 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

தீவிபத்து

சம்பவ இடத்திலேயே  தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு  20க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பற்றி எரியும் நெருப்பு அடுத்தடுத்து பரவி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தீ பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் விரைவில் தீ  கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனத் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு படையினரும் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் ஆப்பிரிக்காவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web