பிரபல ஓட்டலில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து.. ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு நேர்ந்த சோகம்!

 
ராமேஸ்வரம் கபே

பெங்களூரு புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கபே ஓட்டலில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூன்று ஊழியர்களும் ஒரு வாடிக்கையாளர்களும் அடங்குவர். அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிற்பகல் 1 மணியளவில் சிலிண்டர் வெடித்து கஃபே மற்றும் அதைச் சுற்றி கறுப்புப் புகையை ஏற்படுத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தடயவியல் குழுக்கள் பொருட்களை சேகரித்து வருவதாகவும், சிலிண்டர் வெடிப்புக்கான சரியான காரணம் சோதனைகளுக்குப் பிறகு கண்டறியப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா ஊடகத்திடம் கூறியதாவது, வெடித்ததில் சிலிண்டர் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் தடயவியல் குழுக்கள் வெடித்த இடத்தில் மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்த பிறகு வெடித்ததற்கான ஆதாரம் தெரியவரும் என்றும் கூறினார். காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web