கடும் பனி... விளைச்சல் குறைவு... மார்ச் 31 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு!

 
வெங்காயம்


கடும்பனி மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காயம் ஏற்றுமதிக்கு மார்ச் 31ம் தேதி வரை தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பரில் பெரிய வெங்காயம் விலை ரூ.100யைத் தாண்டி விற்பனையான நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை இரட்டை சதமடித்து ரூ.250 வரை பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளில் சிலர், ஒரே மாதத்தில் கோடீஸ்வரர்களானார்கள். பல இடங்களில், வயல்களில் வெங்காயம் திருடுபோனது. வெங்காய லோடு ஏற்றிச் சென்ற லாரிகள் கடத்தப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. 

சின்ன வெங்காயம்வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, தனது கையிருப்பில் இருந்த வெங்காயத்தை விடுவித்ததோடு, வெங்காயம் ஏற்றுமதிக்கும் கடந்த டிசம்பர் 8ம் தேதி முதல் தடை விதித்தது. மேலும்  நுகர்வோருக்கு உதவும் வகையில், சில்லறை சந்தையில் கிலோவுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் வெங்காய விற்பனையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

வெங்காயம்
தற்போது கிலோ 20 ரூபாய் என்கிற அளவில் வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடமாநிலங்களில் கடுங்குளிர்  காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெங்காயம் விலை மீண்டும் உயர வாய்ப்பிருக்கும் நிலையில், வெங்காயத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web