கல்லூரிகளில் சேர அரிய வாய்ப்பு... நாளை முதல் 3 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

தமிழகத்தில் 2022-23ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகின இதன் அடிப்படையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. கல்லூரிகள் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு செய்து உயர்கவித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்தது.
சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை ) சார்ந்த கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நடத்தப்பட்டது. சில அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து இது வரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உடைய மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tngasa.in மற்றும் www.tngasa.org மூலம் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை செப்டம்பர் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகள் குறித்த தகவல்களை www.tngasa.in இணையதளத்தில் “TNGASA 2023-UG VACANCY” என்ற தொகுப்பில் காணலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!