விஜய் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு... பாண்டி, கடலூர்.. அடுத்தடுத்த பிரச்சாரங்களை ரத்து செய்தார் விஜய்!

 
விஜய் வீடு

நேற்று கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம் எதிரொலியாக தவெக தலைவர் விஜயின் அடுத்த வார பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த வாரம் நடைபெற இருந்த தனது பிரசார பயணத்தை விஜய், ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கரூர் விஜய்

முன்னதாக விஜயின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். முன்னதாக மத்திய அரசு அவருக்கு ஏற்கனவே 'ஒய்' பிரிவு பாதுகாப்பை வழங்கி இருந்தது. தற்போது கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகப்படும் வகையில் வரும் அனைவரையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விஜய்

சென்னை நீலாங்கரையில் விஜய் தற்போது தங்கி உள்ள அவரது வீடு உள்ள சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் கூடுதலாக 5 துணை ராணுவ வீரர்கள் விஜய் வீட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?