கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து.. இந்தியாவில் திடீர் அனுமதி ரத்து!

 
சொட்டு மருந்து
 

 

இந்தியாவில், கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.கண் பார்வையை மேம்படுத்தும் என்றும், படிப்பதற்காக மட்டுமே அணியும் ரீடிங் கிளாஸ் எனப்படும் கண்ணாடிகள் இனி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்திருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து

இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், படிக்கும் போது கண்ணாடி அணிவதைக் குறைக்கும், மிக அருகில் உள்ள பொருட்களை பார்க்கும்போது ஏற்படும் கண் மங்கலைத் தடுக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மருந்து தயாரிப்பு நிறுவனமானது, இந்த கண் சொட்டு மருந்தை, மக்கள் யார் வேண்டுமானாலும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வாங்கிப் பயன்படுத்தலாம் என்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியதாகவும் ஆனால், இந்த மருந்துக்கு மத்திய அரசு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே விற்பனை செய்யக் கூடிய மருந்தாக அனுமதி வழங்கியிருந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

சொட்டு மருந்து

இது குறித்து மத்திய அரசு தரப்பில், “என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 'பிரெஸ்வு' (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளைப் பற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைக் கூறி விளம்பரம் செய்வது, மருந்தின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புவதால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மருந்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடுத்தர வயதில், இயற்கையாகவே கண் பார்வை குறைபாடு ஏற்படுவோர் மற்றும் ப்ரெஸ்பியோபியா போன்ற குறைபாடுகளை புதிய கண் சொட்டு மருந்து சரி செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பிரெஸ்வு மருந்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 'பிரெஸ்வு' (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால், படிக்கும்போது மட்டும் சிறு எழுத்துகள் தெரியாததால் கண்ணாடி அணிபவர்கள், பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என்றும், இதன் விலை ரூ.350 என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை